IN ENGLISH
  • image_1
கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் - அ.முத்துக்கிருஷ்ணன்

முதல் பதிப்பு : டிசம்பர் 2011

அ.முத்துக்கிருஷ்ணன் ஒரு எழுத்தாளராகவும் களப் பணியாளராகவும் கடும் உழைப்பினால் உருவாக்கியிருக்கும் இந்த நூல், தமிழக மக்களுக்கு இழைக்கபடவிருக்கும் ஒரு வரலாற்று அநீதிக்கு எதிரான முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடும் தமிழ்மக்களின் கையில் இது ஓர் உறுதிமிக்க ஆயுதம்.

புத்தகத்தை பதிவிறக்க இங்கே அழுத்தவும்.

 


நஞ்சாகும் நீதி - அ.முத்துக்கிருஷ்ணன்

விலை ரு.120

முதல் பதிப்பு : டிசம்பர் 2011

உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்பிரமணியம் சாலை
அபிராமபுரம். சென்னை 600018
044 24993448

சோமாலியா முதல் கூடங்குளம் வரை உலகின் மிக முக்கியமான பிரச்சனைகள் பற்றி அ.முத்துக்கிருஷ்ணன் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் புதிய தொகுதி. யானைமலை, உத்தப்புரம், பரமக்குடி, தெலங்கானா, முல்லை பெரியார் அணை என நம் காலத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்திய பிரச்சனைகளை மிக விரிவாக விவாதிக்கிறது இந்த நூல்.

மதவெறி - ராம் புனியானி;
தமிழில் - அ.முத்துக்கிருஷ்ணன்
விலை ரு.60

முதல் பதிப்பு : டிசம்பர் 2009

உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்பிரமணியம் சாலை
அபிராமபுரம். சென்னை 600018
044 24993448


உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டிற்கு ஏற்பட்டுள்ள வரலாற்று நெருக்கடியினை நம் கண்முன்னே விவரிக்கும் நூல். காஷ்மீர் பிரச்சனை மதமா? அரசியலா?, கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறைகள், இந்துத்துவாவும் தலித சிக்கலும்? என பல தளங்களில் நம் மீது திணிக்கபட்டுள்ள கற்பிதங்களை ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்த நூல்.


தோழர்களுடன் ஒரு பயணம் - அருந்ததி ராய்;
தமிழில் - அ.முத்துக்கிருஷ்ணன்

விலை ரு.60

முதல் பதிப்பு : ஆகஸ்டு 2010

பயணி பதிப்பகம், சென்னை
94451 24576


ஜனநாயக நாடு என பிரகடனம் செய்து கொண்ட ஒரு தேசம் தன் எல்லைக்குள்ளே ஒரு போரை அறிவித்துக் கொள்கிறபோது, அந்த போர் எப்படி காட்சியளிக்கும்? எதிர்ப்பு அங்கு தாக்கு பிடிக்குமா? தாக்கு பிடிக்க வேண்டுமா? மாவோயிஸ்டுகள் யார்? என இன்னும் இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு விடையளிக்கும் நூல்.

அமைதிக்காகப் போராடுவோம் - ராம் புனியானி;
தமிழில் - அ.முத்துக்கிருஷ்ணன்
விலை ரு.35

முதல் பதிப்பு : டிசம்பர் 2008

வாசல் பதிப்பகம்
40D/4, முதல் தெரு, வசந்த நகர்
மதுரை - 625003 கைபேசி - 98421 02133

மதவெறியின் வரலாறு, விடுதலைப் போராட்டத்தில் மதவெறி அமைப்புகளின் பங்கு, விசாரணைக் கமிஷன்களின் அறிக்கைகள் கூறும் உண்மைகள், கட்டுக்கதைகளை உடைக்கும் வரலாற்று ஆதாரங்கள் என எல்லாம் கலந்த தன்மையுடன் இந்த நூலை உருவாக்கியுள்ளார் எழுத்தாளரும் ஆய்வாளருமான ராம் புனியானி.

மலத்தில் தோயந்த மானுடம் - அ.முத்துக்கிருஷ்ணன்
விலை ரு.60

முதல் பதிப்பு : டிசம்பர் 2008

உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்பிரமணியம் சாலை
அபிராமபுரம். சென்னை 600018
044 24993448


இந்தியாவையும் தமிழகத்தையும் தலைகுனியவைத்த பல்வேறு சமூக அவலங்கள், கொடுமைகள் குறித்து இக்கட்டுரைகள் விவாதிக்கின்றன. இளையதலைமுறை அரசியல் விமர்சகர்களில் முக்கியமானவராக உருவாகிவரும் அ.முத்துக்கிருஷ்ணன் ஒடுக்குமுறைக்கு எதிரான குரலை உக்கிரமாக இந்நூலில் பதிவு செய்கிறார்.


ஒளிராத இந்தியா - அ.முத்துக்கிருஷ்ணன்
விலை ரு.100

முதல் பதிப்பு : டிசம்பர் 2007
இரண்டாம் பதிப்ப் : மே 2010

தமிழினி பதிப்பகம்,
சென்னை

ஆயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை, பல லட்சம் விளிம்புநிலை மக்கள் தங்களின் நிலங்களிலிருந்து பெயர்தெறியப்படுதல், வாழ்வுரிமை பறிபோன கிராமப்புற மக்கள் என உலகமயமாக்கலின் உக்கிர விளைவுகளை நம் நாடு சந்தித்த சமகாலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பிது. இந்திய ஊடகங்கள் தொடர்ந்து பெரும் நிறுவனங்களிடமிருந்து விளம்பரங்களைப் பெற்றுக்கொண்டு இந்தியாவை ஒளிரவைக்க முயற்சித்துக் கொண்டிருந்த சமயத்தில் அதனை கட்டுடைக்க முயலும் பிரதிகளாக இவை உருவாயின

குஜராத் 2002 இனப்படுகொலை - தெகல்கா புலனாய்வு முழு தொகுப்பு;
தமிழில் - அ.முத்துக்கிருஷ்ணன்
விலை ரு.50

முதல் பதிப்பு : ஜனவரி 2008
இரண்டாம் பதிப்ப் : பிப்ரவரி 2008

வாசல் பதிப்பகம்
40D/4, முதல் தெரு, வசந்த நகர்
மதுரை - 625003 கைபேசி - 98421 02133

தெகல்கா புலனாய்வு உண்மைகள் வெளிவந்ததும் உலகம் முழுவதிலிருந்தும் குடிமைச் சமூகத்தின் குரல்கள் உருப்பெறத் தொடங்கின. உயிரை பணயம் வைத்து ஆறு மாதங்கள் புலனாய்வு மேற்கொண்ட ஆஷிஷ் கேத்தன் மற்றும் தெகல்கா குடும்பத்தினர் இந்த தேசத்திற்கு செய்த மிகப் பெரும் பங்களிப்பு இது. கோத்ராவில் இனப்படுகொலை செய்யபட்ட 2000 முஸ்லிம்கள் எவ்வாறு அரசு இயந்திரத்தின் உதவியுடன் கொல்லப்பட்டனர் என்பதை துல்லியமாக கொலை செய்தவர்களின் வாக்குமூலங்களாலேயே விளக்கும் நூல்.

அப்சலை தூக்கிலிடாதே - அருந்ததி ராய்;
தமிழில் - அ.முத்துக்கிருஷ்ணன்

விலை ரு.30

முதல் பதிப்பு : செப்டம்பர் 2005

வாசல் பதிப்பகம்
40D/4, முதல் தெரு, வசந்த நகர்
மதுரை - 625003 கைபேசி - 98421 02133

அருந்ததி ராய் அவர்கள் எழுதிய இரு கட்டுரைகளின் மொழியாக்க தொகுதி. அப்சல் தூக்கிலிடப்பட வேண்டும் என்று ஹிந்துத்துவா குரல்கள் வலுபெற்று வந்த வேலையில் பாராளுமன்ற தாக்குதல்கள் என்பது மொத்தமாக அரசு இயற்றிய நாடகம் என விவரித்துச் செல்லும் இந்த நூல் உலகின் பெரும் ஜனநாயகம் எவ்வாறு இயங்குகிறது என்பதை நமக்கு விளக்குகிறது.

சாவேஸ் - அ.முத்துக்கிருஷ்ணன்
விலை ரு.30

முதல் பதிப்பு : ஆகஸ்டு 2006
இரண்டாம் பதிப்பு : டிசம்பர் 2006

வாசல் பதிப்பகம்
40D/4, முதல் தெரு, வசந்த நகர்
மதுரை - 625003 கைபேசி - 98421 02133

வெணிசுவேலாவின் மீது அமெரிக்கா போர் தொடுக்க முயன்றால் அது நூற்றாண்டுப் போராக இருக்கும். அடுத்த நூறு ஆண்டுகளாவது அந்தப் தொடரும். எங்கள் பற்கள்...... எங்கள் நகங்கள்...... எங்கள் முழங்கால்கள் ஒயும்வரை போராடுவோம் என முழுங்கும் சாவேஸ் வெணிசுவேலாவின் அதிபர். வெணிசுவேலாவின் மக்கள், அங்கு அரசு செய்து வந்துள்ள மாற்றங்கள், அங்குள்ள மக்களின் அரசியல் உணர்வு என நமக்கு அங்குள்ள நிலையை அறிமுக செய்யும் நூல்.

குரலின் வலிமை - கேபிரியல் கார்ஸியா மார்க்வேஸ்;
தமிழில் - அ.முத்துக்கிருஷ்ணன்

விலை ரு.15

முதல் பதிப்பு : செப்டம்பர் 2005
மூன்றாம் பதிப்பு : ஏப்ரல் 2007

வாசல் பதிப்பகம்
40D/4, முதல் தெரு, வசந்த நகர்
மதுரை - 625003 கைபேசி - 98421 02133

பிடல் காஸ்ட்ரோ வார்த்தைகளோடு கொண்டிருக்கும் உறவு ஈடுபாடும் மாயாஜாலமானது. புரட்சி நடந்தேறிய காலகட்டத்தில் ஹவானாவுக்குள் நுழைந்து ஒரு வார காலமிருக்கும், காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றி எழுமணி நேரம் மக்களுக்கு உறையாற்றினார். இந்த நிகழ்வு உலக சாதனையாகக்கூட இருக்கலாம். காது மடல்கள் சிலிர்க்க கேட்டுக் கொண்டிருந்த க்யூப மக்கள் மணிக்கணக்காக தங்களின் அன்றாட வேலைகளை மறந்து. இந்த குரலின் வலிமையில் லயித்துப்போனார்கள்.

Share
 

இந்த வார கார்ட்டூன்

இந்த வார புத்தகம்

எழுத்தின் அளவு
Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
பதிவுகளை பெற

தொடரலாம்© 2011 All Rights Reserved by amuthukrishnan
| Adam Olurda Gelir Ozur Dilersen Linklerin Kaldirilir... | porno izle | porno video | Liseli porno | porno izle | amator porno izle | turk pornosu | cocuk pornosu izle | gizli porno videolari | | Adam Olurda Gelir Ozur Dilersen Linklerin Kaldirilir... |